படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி 2022ல் வெளிவந்த படம் 'காந்தாரா'. அப்படம் சுமார் 15 கோடி செலவில் தயாராகி 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் அப்படத்தின் முன்பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' படம் ஆரம்பமாகி நடந்து முடிந்து அக்டோபர் 2ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
அப்படத்தின் வியாபாரம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் மட்டும் இப்படத்திற்கான வியாபாரம் 100 கோடிக்கு நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2002ல் வெளிவந்த 'காந்தாரா' படம் தெலுங்கில் 60 கோடி வசூலித்தது. அதைவிடவும் கூடுதலாக இப்போது வியாபாரம் மட்டுமே நடந்துள்ளது.
அந்த 100 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டுமென்றால் 150 கோடிக்கும் அதிகமாக படத்தின் வசூல் கிடைக்க வேண்டும். இந்த அளவிலான வியாபாரம் தெலுங்கில் முதல் நிலை நடிகர்களுக்கு மட்டும் தான் நடக்கும். ஒரு டப்பிங் படத்திற்கு அந்த அளவிலான வியாபாரம் தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. எப்படியும் பெரிய வசூலைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.