நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கேரளாவில் பிறந்து வளர்ந்த மிர்னா மேனன் தமிழில் அறிமுகமானார், பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை படங்களில் நடித்த அவர் உடன் நடித்த ஒரு நடிகரை காதலித்து கல்யாணம் வரை சென்று பின்னர் அவரிடமிருந்து பிரிந்து சென்றார்.
'பிக்பாஸ்' மலையாளப் படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தால் பிரபலமானார். அதன்பிறகு கிரேஸி பாலோவ், உகரம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். மீண்டும் தமிழில் நாயகியாக 'புர்கா' படத்தில் நடித்தார், ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். தற்போது ஜெயிலர் 2விலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் '18 மைல்ஸ்' என்ற படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார். இதனை சதீஷ் செல்வகுமார் இயக்கி உள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி மிர்னா கூறும்போது "நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம். அந்த வகையில், ஆழமான, இளகிய அதே சமயம் உண்மையான உணர்வுகளை நடிப்பில் கொண்டு வர வேண்டிய கதாபாத்திரம் '18 மைல்ஸ்'-ல் எனக்கு கிடைத்திருக்கிறது.
மெளனம், உணர்வுகள் மூலமே பெரும்பாலும் இந்தக் கதையில் நடித்திருக்கிறேன். வசனம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அசோக் தெளிவாக இருந்தார். அவருடைய டெடிகேஷன் எனக்கும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. வெறும் நடிப்பு மட்டுமே என்றில்லாமல் அன்பு மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டையும் கையாள வேண்டும் என்ற இடத்தில் இருக்கும் இரு நபர்களின் கதை. '18 மைல்ஸ்' வெளியாகும்போது ரசிகர்கள் எந்தளவிற்கு கதையின் உணர்வுகளுடன் தங்களைப் பொருத்தி பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்” என்றார்.