மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தாய் சங்கமான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், 2020ல் பாரதிராஜாவால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இதில் 365 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன்படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன தலைவராக பாரதிராஜா நீடிக்கிறார், செயல் தலைவராக டி.ஜி.தியாகராஜன், பொதுச் செயலாளராக டி.சிவா, துணை தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, லலித்குமார், பொருளாளராக தனஞ்செயன், இணை செயலாளர்களாக முகேஷ் ஆர்.மெஹ்தா, வினோத்குமார் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, விக்னேஷ் சிவன், ஆர்.கண்ணன், ரமேஷ் பிள்ளை, லக்ஷ்மன் குமார், சுதன் சுந்தரம், கமல் போஹ்ரா , கார்த்திகேயன் சந்தானம், நிதின் சத்யா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்படுள்ளனர்.