தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமீபகாலமாக தென்னிந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு முன்னேறி வருகிறார் நடிகை ருக்மணி வசந்த். சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வழியாக ஏஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர கன்னடத்தில் யஷ் ஜோடியாக டாக்ஸிக், ரிஷப் ஷெட்டி ஜோடியாக காந்தாரா ' சாப்டர் 1' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் படத்திலும் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற மதராஸி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் பேசும்போது, ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற ரகசியத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா போல வரும் நாட்களில் ரசிகர்களை ருக்மணி வசந்த் ஜுரம் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.