சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல முன்னணி ஹீரோக்கள் பல வருடங்களுக்கு முன்பு நடித்து வெற்றி பெற்ற படங்கள் அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதில் பல படங்கள் முன்பை போலவே தற்போதும் அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன. சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறி விடுகின்றன. இந்த நிலையில் தான் கடந்த 2007ல் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்து வெளியான எமதொங்கா என்கிற திரைப்படம் 18 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
ரசிகர்கள் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் இந்த படம் பார்க்க தியேட்டருக்கு வந்தனர். ஆனால் ஒரு சில திரையரங்குகளில் பாதி படம் முடிவதற்குள்ளாகவே ரசிகர்கள் பலர் கொத்துக் கொத்தாக தங்களது இருக்கையில் இருந்து எழுந்து தியேட்டரை விட்டு வெளியேறிய வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இத்தனைக்கும் இந்த படம் வெளியான சமயத்தில் அந்த வருடத்தில் தெலுங்கில் வெளியாகி அதிகம் வசூலித்த படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது உள்ள ரசிகர்களை ஈர்ப்பதற்கு ஏனோ இந்த படம் தவறிவிட்டது என்றே தெரிகிறது.