சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இருக்கிறார்கள். அவர்களை நாயகர்களாக நடிக்க வைத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி அவர்களை பான்--இந்தியா நடிகர்களாகவும் மாற்றிவிட்டார் ராஜமவுலி.
பட வெளியீட்டிற்கு முன்பாக பிரமோஷனுக்காக பெரும்பாலான ஊர்களுக்கு ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் சென்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆனவுடன் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் தனித்தனியே தங்களை பிரமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தங்களுக்குக் கிடைத்த பிரபலத்தை அடுத்தடுத்த படங்களின் பயன்படுத்திக் கொள்ளவே இந்த ஏற்பாடு. மும்பையில் உள்ள பிரபல செலிபிரிட்டி மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்களாம். அதன் ஒரு பகுதியாக நேற்று மும்பையில் 'ஆர்ஆர்ஆர்' தியேட்டர் ஒன்றிற்குச் சென்றுள்ளார் ராம்சரண். வட இந்திய ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார் ஜுனியர் என்டிஆர்.
ராம்சரண் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். என்டிஆர் அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்திலும், அதற்கடுத்து 'கேஜிஎப், சலார்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.