புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. டிரைலர் வெளியானதிலிருந்தே இந்தப் படத்தின் காப்பி, அந்தப் படத்தின் காப்பி என பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.
தமிழில் யோகி பாபு நடித்து வெளிவந்த 'கூர்க்கா', ஹாலிவுட்டில் ப்ரூஸ் வில்லிஸ் நடித்து வெளிவந்த 'டை ஹார்டு' படங்களின் காப்பி என்று பலரும் சொன்ன நிலையில், மேலும் பல 'ஷாப்பிங் மால்' படங்களைத் தேடி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் 2009ல் வெளிவந்த ஹாலிவுட் படமான 'பால் பிலார்ட் - மால் காப்' மற்றும் அப்படத்தின் இரண்டாம் பாகமான 2015ல் வெளிவந்த 'பால் பிலார்ட் மால் காப் 2' படத்தின் காட்சிகளைக் காப்பியடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த இரண்டு படங்களுமே படத்தின் நாயகன் பால் பிலார்ட்--டின் நகைச்சுவை கலந்த ஹீரோயிசத்தால் ரசிக்கப்பட்டவை.
'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்றிருக்கும் நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், சுனில் ரெட்டி ஆகியோரிடம் பால் பிலார்ட்டின் நகைச்சுவைத் தாக்கத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.