பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தெலுங்குத் திரையுலகத்திலிருந்து அடுத்த மெகா வெற்றியாக 'ஆர்ஆர்ஆர்' படம் அமைந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த படம் 800 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இப்படம் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்தது. படத்தில் நடித்த ஜுனியர் என்டிஆர், ராம்சரண், தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் வேறு எந்தப் படங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக மட்டுமே உழைத்தனர்.
படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு அதற்காக கடுமையாக உழைத்த சில முக்கிய டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் ஆகியோருக்கு அன்புப் பரிசாக 11 கிராம் தங்க நாணயம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ராம்சரண். அவர்களுடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டு அவர்களுக்கு இனிப்புகளுடன், தங்க நாணயத்தை வழங்கி தன் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு ராம்சரண் கதாநாயகனாக நடித்த 'மகதீரா' படம் பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்த ஒரு படம். 'பாகுபலி' படம் வருவதற்கு முன்பு அந்தப் படம்தான் தெலுங்கில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்தது. அதற்குப் பிறகு வெளிவந்த சில படங்கள் அந்த சாதனையை முறியடித்தது. இப்போது மீண்டும் ராஜமவுலி - ராம்சரண் கூட்டணி 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தெலுங்கில் அதிக வசூலைப் பெற்ற படமாக முதலிடத்தில் உள்ளது.