நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் தர்ஷன். கடந்த வருடம் தனது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத சிறைவாசத்திற்கு பிறகு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மைசூர் பகுதியில் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் மற்றும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரின் ஜாமீனையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னட திரை உலகத்திலிருந்து தர்ஷனின் இந்த குற்ற செயலுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்து வருபவர் நடிகை ரம்யா. தமிழில் பொல்லாதவன், குத்து, ஏழுமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் முன்னாள் எம்.பியும் கூட. இந்த நிலையில் தர்ஷனின் ரசிகர்கள் தங்களது அபிமான நடிகருக்கு எதிராக ரம்யா கூறிய கருத்துக்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் சோசியல் மீடியாவில் அவர் மீது ஆபாசமாக அவதூறு கருத்துக்களை கூறியதுடன் பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து நடிகை ரம்யா அளித்த புகாரின் பேரில் தர்ஷனின் ரசிகர்கள் 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதில் தற்போது தர்ஷினின் ரசிகர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .மேலும் இதில் தொடர்புடைய பலரை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.