‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! |
டிஜிட்டலில் திரைப்படங்களைத் தியேட்டர்களில் திரையிட வி.பி.எப் என்ற கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அந்தப் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். சில தனியார் நிறுவனங்கள் அந்த விபிஎப் கட்டணத்தை அதிகமாக வாங்குவதால் சொந்தமாகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தது மலையாள தயாரிப்பாளர் சங்கம்.
அதன்படி அவர்களது 'பிடிசி' என்ற நிறுவனம் மூலம் தியேட்டர்களுக்குத் தேவையான 'கன்டென்ட்'களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியது. ஆனால், இந்த புதிய முறைக்கு பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சம்மதிக்கவில்லை. கியூப், யுஎப்ஓ ஆகிய நிறுவனங்களுடன் தாங்கள் ஏற்கெனவே போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி மட்டுமே செயல்படுவோம் என்றது.
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் அவர்களது தியேட்டர்களில் மலையாளப் படங்களைத் திரையிடுவதையும் நிறுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபமாக உருவெடுத்தது. எதிர்காலத்தில் பிவிஆர் நிறுவனத்திற்கு மலையாளப் படங்களைத் தர மாட்டோம் என மலையாளத் திரையுலகக் கூட்டமைப்பு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிவிஆர் நிறுவனம் மலையாளப் படங்களை தொடர்ந்து திரையிட சம்மதம் தெரிவித்தது. புதிதாக திறக்கப்படும் தியேட்டர்களில் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தின் 'பிடிசி' மூலம் 'கன்டென்ட்'களை வாங்கிக் கொள்ளவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு பிவிஆர் தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட மலையாளப் படக் காட்சிகள் இன்று முதல் நடைபெற உள்ளது.