குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 230 கோடி வசூலித்து இதுவரை மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. இத்தனைக்கும் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படத்தில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமலேயே அறிமுக இயக்குனர் சிதம்பரத்தின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. அதே சமயம் இந்த படத்தின் தயாரிப்பு சமயத்தில் சிராஜ் வளையதாரா என்பவர், தயாரிப்பு செலவுக்காக தான் ஒன்பது கோடி பணம் கொடுத்து உதவியதாகவும் படம் வெளியானபின் லாபத்தில் 40 சதவீதம் தனக்கு கொடுப்பதாக கூறிய தயாரிப்பாளர்கள் அதை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்றும் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றம் மஞ்சும்மேல் வாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டது. இதுகுறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த பண மோசடி குறித்து அமலாக்க துறையும் தானாகவே முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.
சமீபகாலமாக மலையாள திரை உலகில் கருப்பு பணம் உள்ளே நுழைந்துள்ளது என கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்துள்ள அமலாக்கத்துறைக்கு மேலும் பல படங்களுக்கு இதுபோன்று கருப்பு பணம் செலவிடப்பட்டுள்ளது என்கிற தகவலும் கிடைத்துள்ளதாம். இதனை தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் வரவு செலவுகளை தோண்டும் வேலையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.