Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலை ஏறும் போது உச்சியை பார்க்காதீங்க- இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட தகவல்

23 ஜூன், 2024 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Dont-look-at-the-top-while-climbing-a-mountain---Director-Selvaraghavan-said


இயக்குனர் செல்வராகவன் சோசியல் மீடியாவில் அவ்வப்போது சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், நாம் செய்கிற வேலை எதுவாக இருந்தாலும் அதில் கர்வமாக செய்ய வேண்டும். வேலை செய்யும் போது கடிகாரத்தை பார்க்க கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் போது வேலை ரொம்ப கடினமாக இருக்கிறது. வறுத்து எடுக்கிறார்கள் என்று அந்த வேலையை பற்றி புகார் சொல்வதை நிறுத்த வேண்டும். வல்லரசு நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். வல்லரசு நாடுகளில் எந்த வேலையாக இருந்தாலும் அதை கர்வத்துடன் செய்வார்கள். கர்வத்தை மண்டையில் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள். ஆட்டோ டிரைவர், டாக்ஸி டிரைவர் என்றால் கூட அந்த வேலையை கர்வமாக செய்ய வேண்டும்.

செய்கிற வேலையில் வெறுப்பை காட்டாமல் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். குறிப்பாக வேலை செய்யும்போது அது எப்போது முடியும் என்று கடிகாரத்தை பார்க்காமல் முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், மலை ஏறும் போது அதன் உச்சியை பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் ஏறும் எண்ணமே போய்விடும். பொறுமையாக ஒவ்வொரு படியாக ஏறிச் செல்ல வேண்டும். இப்படித்தான் நாம் செய்யும் வேலைகளிலும் செயல்பட வேண்டும் என்று அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மஞ்சும்மேல் பாய்ஸ் சர்ச்சை ; ஐந்து வருட ஹிட் படங்களை தோண்டும் அமலாக்கத்துறைமஞ்சும்மேல் பாய்ஸ் சர்ச்சை ; ஐந்து ... டி.இமான் இசையில் பாடிய பாடகி சைந்தவி! டி.இமான் இசையில் பாடிய பாடகி சைந்தவி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)