ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
இயக்குனர் செல்வராகவன், தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், தற்போது வி.ஒய்.ஓ.எம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக விஜயா சதீஷ் தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும், செல்வராகவனின் தம்பியுமான தனுஷ் வெளியிட்டார்.
‛மனிதன் தெய்வமாகலாம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இதற்கு முன் ‛ட்ரிப், தூக்குத்துரை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
“இயற்கையும் அமைதியும் சூழ்ந்த ஒரு கிராமத்தின் ஒற்றுமையை சிதைக்கும் பேரிடர், அதில் சிக்கிக் கொள்ளும் நாயகனை தனது மக்களை காப்பாற்ற ஒரு முடிவெடுக்கச் செய்கிறது. அவர் எடுக்கும் அந்த முடிவே, அவனை அக்கிராம மக்களின் தெய்வமாக மாற்றுகிறது. அதனால்தான் இப்படத்திற்கு 'மனிதன் தெய்வமாகலாம்' எனப் பெயரிட்டுள்ளோம்.” என்றார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.