அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
25 வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஊர்வசி. அதன் பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய ஊர்வசி மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறார். அப்படி அவர் மலையாளத்தில் நடிகை பார்வதியுடன் இணைந்து நடித்துள்ள ‛உள்ளொழுக்கு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் படம் முழுக்க சீரியஸான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஊர்வசி. சொல்லப்போனால் நடிப்பில் பார்வதியையே ஊர்வசி ஓவர் டேக் செய்து விட்டார் என்று படம் பார்த்த பலரும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரது காமெடி திறமை பற்றி பேச்சு வந்தபோது, “என்னுடைய நகைச்சுவை காட்சியில் யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். குறிப்பாக உருவ கேலி என்பதை நான் தீவிரமாக எதிர்க்கிறேன். பெரும்பாலும் பல படங்களில் கதாநாயகர்களுடன் கூடவே சுற்றிக்கொண்டு வரும் நபர்கள் இதுபோன்ற காமெடியை தான் பின்பற்றி வருகிறார்கள். நான் ஜட்ஜ் ஆக பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கூட, பங்கேற்கும் போட்டியாளர்கள் உருவ கேலி செய்து காமெடி செய்தால் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களுக்கு ஜீரோ மார்க் தான் வழங்குவேன். அதை ஊக்குவித்தால் தவறான முன்னுதாரணமாக போய்விடும்” என்று கூறியுள்ளார்.