சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் |
பிரபல பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பிரியதர்ஷன் கடந்த 2016ல் மோகன்லாலை வைத்து இயக்கிய ஒப்பம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில் அக்ஷய் குமார், சைப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ஹைவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகவே கேரளாவின் எர்ணாகுளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் குருவாயூர் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டுள்ளார். இதற்காக குருவாயூர் அருகில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவர் அங்கிருந்து பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் துண்டு அணிந்து கொண்டு குருவாயூர் கோவில் சென்று வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.