தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளை வென்றது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் சிறந்த நடிகராகவும், ராணி முகர்ஜி சிறந்த நடிகையாகவும், எம்எஸ் பாஸ்கர், விஜயராகவன் சிறந்த துணை நடிகராகவும் தேர்வாகினர். இதேப்போல் பல மொழிகளிலும் உள்ள படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அதில் சர்ச்சைகள் எழும். இந்த படத்தை விட அந்த படத்திற்கு கொடுத்திருக்கலாம், அந்த நடிகர், நடிகைக்கு வழங்கியிருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழும். இந்தமுறை நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார். இத்தனைக்கும் இவருக்கு இந்தாண்டு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ‛உள்ளொழுக்கு' என்ற மலையாள படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்வசி கூறுகையில், ‛‛எனக்கு விருது அறிவித்த தேர்வு குழுவிற்கு நன்றி. எதன் அடிப்படையில் ஷாரூக்கான் சிறந்த நடிகர் என தேர்வு செய்தீர்கள். இதற்கான அளவுகோல் என்ன. சிறந்த நடிகரான விஜய ராகவனை துணை நடிகராக தேர்வு செய்தது ஏன். பூக்காலம் படத்திற்காக அவர் பல மணிநேரம் மேக்-அப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தார். தமிழில் நான் நடித்த ஜே.பேபி படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரையில் இருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு பாராட்டு கூட இல்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம், வரி கட்டுகிறோம். நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.