இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

பாலிவுட்டில் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாதுரி தீக்ஷித். இப்போதும் ரசிகர்களுக்கு இவர் மீது ஒரு கிரேஸ் உண்டு. சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாதுரி தீக்ஷித் கலந்து கொள்வதாகவும், அதில் அவரது நடனமும் இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிக அளவிலான ரசிகர்கள் கட்டணம் செலுத்தி விழா அரங்கில் திரண்டனர். ஆனால் 7.30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட விழா, மாதுரி தீக்ஷித் வருவதற்கு 2:30 மணி நேரம் தாமதமானதால் 10 மணிக்கு துவங்கப்பட்டது.
இதனால் பொறுமை இழந்த ரசிகர்கள் பலர் நிகழ்ச்சி துவங்கும் முன்பே அங்கிருந்து வெளியேறினர். மேலும் சோசியல் மீடியாவில் இது குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட அவர்கள் தங்களது டிக்கெட் கட்டணத்தை திருப்பி தரும்படியும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாதுரி தீக்ஷித் தாமதமாக வந்தது ஒரு பக்கம் என்றால் அவரது நடனத்திற்காக பொறுமையாக காத்திருந்த ரசிகர்களுக்கு, அவர் நடித்த ஹிட் படங்களில் இருந்து இரண்டே இரண்டு வரிகளுக்கு மட்டுமே ஒரு தொகுப்பு நடனம் ஆடிச் சென்றது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது குறித்தும் ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.