சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். ஏடாக்கூடாமாக பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். 2021ல் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் இவர் மீதும், இவரது நண்பர் சாம் அபிஷேக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் 2021, ஆகஸ்டில் இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார்.
இந்நிலையில் டில்லி நகர வீதிகளில் இவர் சுற்றி வந்துள்ளார். அவரை மீட்டு தரக்கோரி மீரா மிதுன் தாயார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் அங்குள்ள காப்பகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம், மீரா மிதுனை கைது செய்து ஆக., 11ல் ஆஜர்படுத்தும்படி மத்திய குற்றப் பிரிவு போலீஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.