தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சமீபத்தில் 2024ம் வருடத்திற்கான கேரள மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 9 விருதுகளை பெற்ற நிலையில் அதற்கு அடுத்ததாக போகன்வில்லா திரைப்படம் ஏழு விருதுகளை பெற்றுள்ளது. அமல் நீரத் இயக்கிய இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் சுசின் ஷியாமுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமாக இவர் தான் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கும் இசையமைத்தவர்.
தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சுசின் ஷியாம், எனக்கு சிறந்த இசையமைப்பாளராக மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கு தான் விருது கிடைக்கும் என்று நான் ரொம்பவே எதிர்பார்த்தேன். அந்த படத்திற்காக எனக்கு இந்த விருந்து கிடைத்திருந்தால் இன்னும் அதிகம் சந்தோஷம் அடைந்திருப்பேன். அப்படி அந்தப் படத்திற்காக விருது கிடைக்காததில் கொஞ்சம் வருத்தமே என்று கூறியுள்ளார்.
ஆனால் ரசிகர்கள் பலரும், “கவலைப்படாதீர்கள்.. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை தான் உறுதுணையாக இருந்தது. உங்களுக்கென்று தனித்துவமான இசைக்கு போகன்வில்லா படத்திற்காக விருது கிடைத்ததற்கு பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்” என்று கிண்டல் கலந்த விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.