ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் |

தனது வாழ்க்கை படத்தில் தானே நடிக்கிற வாய்ப்பு சிலருக்கு மட்டுமே அமையும். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் முதல் பல நடிகைகள் நடித்தார்கள். ஷகிலாவின் கதையில் சில நடிகைகள் நடித்தார்கள், சாவித்ரி கதையில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.
ஆனால் சுதா சந்திரன் தன் கதையில் தானே நடித்தார். திருச்சி அருகே வயலூர்தான் சுதாவின் சொந்த ஊர். ஆனால் அவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நாட்டியம் கற்று இந்திய அளவில் புகழ்பெற்ற நடன கலைஞரான இருந்தார். சாலை விபத்து ஒன்றில் அவர் தனது ஒரு காலை இழந்தார்.
அதன்பிறகு முறையான பயிற்சியெடுத்து செயற்கை கால் பொருத்தி மீண்டும் நடனமாடினார். அவரது தன்னம்பிக்கையும, விடா முயற்சியும் உலகிற்கே எடுத்துக் காட்டானது. அவரது வாழ்க்கை 'மயூரி' என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது. பின்னர் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது.
இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார். சுதாவுடன் பி.எல்.நாராயணா, வீரமாச்சேனி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்தனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை அமைத்திருந்தார். 1985ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தில் வெளியிடப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.




