போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினி நடிக்கும் படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்பந்தம் ஆனார். கதை மற்றும் வேறு சில விஷயங்களில் முரண் ஏற்பட அவர் படத்தில் இருந்து விலகினார். அந்த படத்துக்காக பலரிடம் கதை கேட்டு வருகிறார் ரஜினிகாந்த். சில வாரங்களுக்கு முன்பு 'குரங்கு பொம்மை' இயக்குனர் நித்திலன் ரஜினி படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வந்தது.
அடுத்தது, 'பார்க்கிங்' இயக்குனர் பாலகிருஷ்ணன் கதை சொல்லி ஓகே சொல்லிவிட்டார். விரைவில் அறிவிப்பு வரப்போகிறது என்றார்கள். அதற்கடுத்து 'ஜனநாயகன்'க்குபின் ரஜினி படத்தை இயக்கப்போகிறார் எச்.வினோத் என்று தகவல் கசிந்தது. இப்போது 'ஓ மை கடவுளே, டிராகன்' படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து கதையை ரஜினி ஓகே சொல்லிவிட்டார். விரைவில் அறிவிப்பு வருகிறது, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று புது தகவல்கள் பரவுகின்றன.
இதை ரஜினி தரப்போ, அஸ்வத் தரப்போ உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையில், எத்தனை நாட்கள் அந்த பட அப்டேட்டுக்காக காத்திருப்பது? சட்டுபுட்டுனு இயக்குனரை அறிவியுங்கள் என்று கமல் தரப்பும் பிரஷர் கொடுக்கிறதாம்.