'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? |

யூகி சேது காமெடி நடிகராக அதிகம் அறியப்பட்டவர். காமெடியாக 'டாக் ஷோ' நடத்தி புகழ் பெற்றவர். ஆனால் அவர் ஒரு இயக்குனராகத்தான் சினிமாவில் நுழைந்தார். அவர் இயக்கிய முதல் படம் 'கவிதை பாட நேரமில்லை'. ரகுவரன், அமலா, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது இந்தியில் வெளியான 'அங்குசு' என்ற படத்தின் ரீமேக். எல் வைத்தியநாதன் இசையமைத்து இருந்தார்.1987ம் ஆண்டு வெளியானது.
1991ம் ஆண்டு வெளியான 'மாதங்கள் ஏழு' என்ற படத்தில் தான் யூகி சேது முதல் முதலில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தையும் அவர் இயக்கினார். இரண்டு படங்களுமே தோல்வி அடைந்ததால் படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.




