பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை ரோஜா 90 காலகட்டத்தில் இருந்து 2000 காலகட்டத்தின் வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர். 125 படங்களுக்கு மேல் நடித்தவர். கடந்த பல வருடங்களாக ஆந்திரா, தெலுங்கானாவில் அரசியலில் பிஸியாக இயங்கி வருகிறார்.
தற்போது 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழில் அடுத்த படமாக ஜமா படத்தை இயக்கி, நடித்த பாரி இளவழகன் இயக்கி, நடித்து வரும் புதிய படத்தில் ரோஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை பார்த்த பலரும் ரோஜாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை டூரிஸ்ட் பேமிலி, குட் நைட் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.