ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ் சினிமாவில் 1950களில் கதையை தாண்டி ஒரு சில நடன காட்சிகள் இடம்பெறும். அப்படியான நடன காட்சிகளில் ஆடி பின்னர் நடிகையாகவும் புகழ் பெற்றவர்கள்தான் பத்மினி, ராகினி, லலிதா சகோதரிகள். இவர்கள் 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
இதேபோன்று தமிழ்நாட்டில் பிறந்த சாயி-சுப்புலட்சுமி சகோதரிகளும் தமிழ் சினிமாவில் நடனமாடி புகழ்பெற்றார்கள். பின்னர் நடிக்கவும் செய்தார்கள். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, பத்மினி சகோதரிகள் போன்று இவர்கள் புகழ்பெறவில்லை.
இந்த சகோதரிகள் பாடகி பி.ஏ.பெரியநாயகி, நடிகை ஆர்.பத்மா ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள். இவ்விருவரும் தமிழ் படங்களில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடனமாடியுள்ளனர்.
முறைப்படி நடனம் கற்ற இந்த சகோதரிகள் 'மலைக்கள்ளன்' படத்தில் அறிமுகமானார்கள். அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டிய நாடகத்தில் சாயி அல்லியாகவும், சுப்புலக்ஷ்மி வள்ளியாகவும் நடித்திருந்தனர். அதன் பிறகு ரத்தக்கண்ணீர், டாக்டர் சாவித்திரி, கோமதியின் காதலன், தாய்க்குப்பின் தாரம் பெரிய கோவில், கண் திறந்தது, ஒரே வழி , பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் உள்ளிட்ட பல படங்களில் நடனமாடியுள்ளனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் இவர்களுக்கு 'பம்பர சகோதரிகள்' என்ற பட்டம் தந்தார். பம்பரம்போன்று சுழன்று ஆடியதால் இந்த பட்டம். சிவாஜியின் அன்னை இல்ல திறப்பு விழாவில் இவர்கள் 3 மணி நேரம் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார்கள்.