குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் கடந்த மூன்று வருடங்களாக படமாகி வருகிறது. படம் எப்போது வெளியாகும் என ராம் சரண் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பட வெளியீடு குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ராம் சரண். செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபரில் படம் வெளியாகும் என்றும், பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் வெளியாக உள்ளது. அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் ராம் சரண் சித்தப்பா பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' செப்டம்பர் 27ம் தேதியும், ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'தேவரா' அக்டோபர் 10ம் தேதியும் வெளியாக உள்ளது. பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 எடி' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் சேர்த்து சரியான இடைவெளியில் 'கேம் சேஞ்சர்' படம் வெளியாகலாம்.