வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மலையாளத்தில் பிரபல நடிகரும், தற்போதைய மத்திய இணைய அமைச்சராக பொறுப்பு வகிப்பவருமான சுரேஷ் கோபி நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகியுள்ள படம் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) இந்த படம் இன்று (ஜூன் 27) ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் சில நாட்களுக்கு முன்பு சென்சாருக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழும் பெற்ற நிலையில் படத்தின் டைட்டிலில் இடம் பெறும் ஜானகி என்கிற பெயரை நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் தர முடியும் என சென்சார் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனராம். ஆனால் அதை எழுத்துப்பூர்வமாக கொடுக்காமல் வாய்மொழியாக கூறியுள்ளனர். படத்தின் பெயரை மாற்ற விரும்பாமல் தற்போது மறு தணிக்கைக்காக ஜேஎஸ்கே படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன் தனது சோசியல் மீடியா பதிவில் கூறும்போது, “இந்த படத்தில் எந்த ஒரு மதத்தின் பெயரையோ கடவுளையோ புண்படுத்தும் விதமாக காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. அப்படி இருந்தால் சென்சாரில் எப்படி எங்களுக்கு எந்த வெட்டும் இல்லாமல் படத்தை திரையிட சம்மதித்திருப்பார்கள். அவர்களுக்கு ஜானகி என்கிற பெயரை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பெயராக பட டைட்டிலில் வைக்கக்கூடாது என்பதுதான் எண்ணம். திரைப்படங்களுக்கு கடவுள்களின் பெயர்களை வைக்கக்கூடாது என்று கூறுவதற்கு இங்கே ஒன்றும் தலிபான்கள் ஆட்சி செய்யவில்லையே?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.




