சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சாபா தேர்தலில் கேரளாவில் பாஜக சார்பாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். அது மட்டுமல்ல சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் அவரும் ஒரு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முதன்முறையாக பாஜகவிற்கு ஒரு எம்பியை தேடிக்கொடுத்ததற்காக அவருக்கு இந்த அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கோபி தனது அரசு உதவியாளராக தன்னுடைய ஆஸ்தான மேக்கப் மேனான சினோஜ் என்பவரை நியமித்துள்ளார்.
கடந்த 18 வருடங்களாக சுரேஷ் கோபிக்கு மேக்கப்மேனாகவும் அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு நண்பராகவும் பயணித்து வந்த சினோஜ், தற்போது இதன் மூலம் புதிய வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்பே சுரேஷ் கோபி ராஜ்யசபா எம்பியாக இருந்த போதும் ஒரு வருடம் அவருக்கு அரசு உதவியாளராக இவர் வேலை பார்த்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகி உள்ள நிலையில் அவரது உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.