எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை |

கன்னட திரையுலகில் செல்வாக்கு மிக்க குடும்பமான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சகோதரர்தான் ராகவேந்திரா ராஜ்குமார். இவரது மகன் யுவ ராஜ்குமார். சமீபத்தில் வெளியான யுவா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த நிலையில் திடீரென தனது மனைவி ஸ்ரீதேவி பைரப்பாவை விவாகரத்து செய்வதாக கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் யுவ ராஜ்குமார். இதற்கு காரணமாக குரூரம் அதாவது கொடுமை என்கிற பிரிவில் அவர் விவாகரத்து கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல அதே பிரிவில் அவர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார் அவரது மனைவி ஸ்ரீதேவி பைரப்பா.
இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்ரீதேவி பைரப்பா, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை தங்களது திருமண வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது என்றும் கடந்த ஒரு வருடமாகவே யுவ ராஜ்குமாரின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதை பார்க்க முடிந்தது என்றும் கூறியுள்ளார். குறிப்பாக தன்னுடன் நடித்த சக நடிகையுடன் அவருக்கு மிகவும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அது தனக்குத் தெரிய வந்தபோது அப்போதிருந்து தன்னிடம் தனது கணவர் மட்டுமல்ல, அவரது பெற்றோரும் சேர்ந்து வெறுப்பு காட்ட துவங்கினார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தான் இங்கிருந்தால் ஏதாவது பிரச்சனை செய்வேன் என்பதற்காக தன்னை மேல் படிப்பு படிப்பதற்கு கல்விக்கடன் பெற வைத்து வலுக்கட்டாயமாக அமெரிக்காவிற்கு ஒரு வருட காலம் அனுப்பி வைத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் ஸ்ரீதேவி. யுவ ராஜ்குமாருக்கும் அவருடன் நடித்த சக நடிகைக்கும் இருக்கும் நெருக்கம் தெரிந்தும் கூட தான் அவரைப் பற்றி வெளியே எதுவும் பேசாமல் பொறுமை காத்து வந்த நிலையில் தற்போது தன்னையே களங்கப்படுத்தும் விதமாக அவர்கள் விவாகரத்து விண்ணப்பத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை குறிப்பிட்டதை பார்த்த பிறகு என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார் ஸ்ரீதேவி பைரப்பா.
தனது நீண்ட நாட்கள் தோழியான ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட யுவ ராஜ்குமார் சினிமாவில் நுழைந்து ஒரு படமே நடித்து வெளியாகியுள்ள நிலையில் விவாகரத்திற்கு வின்னப்பித்துள்ளதும் இப்படி மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதும் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.