சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ககனாச்சாரி என்கிற திரைப்படம் வெளியானது. அருண் சந்து என்பவர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் தரமான விஎப்எக்ஸ் பணிகளுடன் வெளியான இந்த படத்தை பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினார்கள்.
கேரளாவில் ஓரளவிற்கு இந்த படம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் சேர்த்து வெளியிட இருக்கிறார்கள். வரும் ஜூலை 5ம் தேதி இந்த படம் நான்கு மொழிகளிலும் வெளியாகிறது. பிரபல நிறுவனமான ஜெமினி பிலிம்ஸ் மற்ற மொழிகளில் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.