ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைக்கோ கிரைம் திரில்லர் படமாக வெளியான பாரன்சிக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முழுக்க முழுக்க பாரன்சிக் டிபார்ட்மெண்ட்டை மையப்படுத்தி உருவான இந்த படத்தை அகில்பால் - அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர்கள் ஐடென்டி என்கிற படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்திலும் டொவினோ தாமஸ் தான் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளார் நடிகை திரிஷா. நடிகர் வினய் ராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிஷா, அதன்பிறகு நடிகர் வினய் ராய் இருவரும் இந்த படத்தில் தங்களது போர்ஷனை நடித்து முடித்தனர். கிட்டத்தட்ட 130 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது நாயகன் டொவினோ தாமஸும் இந்த படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளார். அதேசமயம் இன்னும் சில நாட்கள் வேறு சில காட்சிகளை இயக்குனர்கள் படமாக்க இருக்கிறார்கள் என்றும் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க இருக்கிறது என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.