வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாகவே சில நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் வாய்ப்பு தேடி நடிக்கப் போன மற்றும் நடித்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோரால் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளானதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து இப்படி பலரும் துணிச்சலாக பேசத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் எப்போதுமே புகார் தெரிவிப்பவர்களின் கருத்துக்களை மட்டுமே வைத்து முடிவு செய்யாமல் எதிர் தரப்பினரின் பக்கம் உள்ள நியாயங்களையும் கேட்க வேண்டும் என நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் ஆண்களும் கூட பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டங்களில் நான் நடித்த ஒரு படத்தின் ஒருங்கிணைப்பு நபர் ஒருவர் இதுபோன்று காஸ்டிங் கவுச் விஷயத்தை ஊக்கப்படுத்தி செயல்பட்டு வந்தார். இது குறித்து படப்பிடிப்பு தளத்திலேயே அவரை தட்டிக்கேட்டு 'கவனிக்க' வேண்டிய விதத்தில் கவனிக்கவும் செய்தேன். ஆனால் அதன்பிறகு என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
அட்ஜஸ்ட் செய்துகொள்ள மறுக்கும் நடிகைகளை மட்டும் படத்தை விட்டு நீக்காமல் இப்படி தட்டிக் கேட்பவர்களையும் அதிலும் பிரபலமான முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ்கோபியின் மகனையே ஒரு படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான தகவல் தான்.