வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தற்போது கண்ணப்பா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இது 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கதை.
இந்த படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் பெண் கடவுளாகவும், பிரீத்தி முகுந்தன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று விஷ்ணு மஞ்சுவின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். படம் தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்திலுள்ள விஷ்ணுவின் இரண்டு அலுவலகங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே விஷ்ணுவிடம் இன்று விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய விஷ்ணு '' என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. படம் வெளியாகும் நிலையில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டாம்'' என்றார்.




