கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? | விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? |
கடந்த சில நாட்களாகவே மலையாள நடிகரும் தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகிப்பவருமான சுரேஷ் கோபி நடித்திருக்கும் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) திரைப்படம் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டு வந்ததும், நேற்று (ஜூன்-27) திட்டமிட்டபடி வெளியாக முடியாமல் போனதும் தான் மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம். படத்தின் டைட்டில் இடம் பெற்றுள்ள ஜானகி என்கிற பெயரை மாற்றி விட்டு வேறு பெயர் வைக்கும் படி சென்சார் அதிகாரிகள் படத்தின் இயக்குனரிடம் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்,
ஆனால் படத்தின் பெயரை மாற்ற மறுத்து படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படத்தை அனுப்பி வைத்தனர். இந்த படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீஸ் ஆகவில்லை. அதேசமயம் ரிவைசிங் கமிட்டியும் அதே பெயர் காரணத்தை காட்டி சான்றிதழ் தர மறுத்துள்ளது. இந்த நிலையில் பட தயாரிப்பாளர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று (ஜூன் 27) இந்த வழக்கு விசாரணை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஜானகி என டைட்டில் பெயர் வைப்பதால் என்ன பிரச்சனை வரப்போகிறது ? ஜானகி என்றால் சீதாவை குறிக்கும் என்று சொன்னால் ஏற்கனவே சீதா, கீதா என்கிற பெயர்களிலெல்லாம் படங்கள் வந்து விட்டதே. அப்போது என்ன பிரச்சனை வந்தது ? ஏன் ராம் லக்ஷ்மண் என்கிற பெயரில் கூட படம் வந்ததே. இப்போது ஜானகி என்கிற டைட்டில் வைக்கப்பட்டதற்கு கூட யார் ஒருவரிடம் இருந்து கூட எந்த புகாரும் இல்லையே..? அப்படி இருக்கையில் இதில் எங்கே மதம் குறித்த பிரச்சனை உள்ளே வந்தது?” என சராமரியாக கேள்விகளை எழுப்பினார்.
சென்சார் தரப்பில் இருந்து ஆஜரான பெண் வழக்கறிஞர், இந்த கேள்விகளை சமாளிக்கும் விதமாக சில வாதங்களை முன் வைத்தார். ஆனாலும் திருப்தியடையாத நீதிபதி மீண்டும் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என கூறியுள்ளார்.