மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிக்க கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'கண்ணப்பா'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும், விமர்சகர்களின் பாராட்டுக்களும் நிறையவே கிடைத்தது. ஆனாலும், வசூலில் தடுமாறி வருகிறது.
விஷ்ணு மஞ்சுவுக்கு அதிக வசூலைக் கொடுத்த படம் என்ற பெயரைப் பெற்றுத் தந்தாலும் 50 கோடி வசூல் மட்டுமே கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். இன்னும் 60 கோடி வரை வசூலித்தால்தான் படம் லாபக் கணக்கை ஆரம்பிக்க முடியுமாம்.
சுமார் 200 கோடி வரை செலவு செய்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம். படத்தில் பங்கேற்ற மற்ற மொழியின் பிரபலங்கள் இருந்தும் படத்தை சரியான விதத்தில் கொண்டு செல்லவில்லை என்று திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழுக்கு சரத்குமார், மலையாளத்திற்கு மோகன்லால், ஹிந்திக்கு அக்ஷய்குமார், பான் இந்தியா நடிகர் பிரபாஸ், மதுபாலா, காஜல் அகர்வால் என அனைத்து மொழிகளிலும் தெரிந்த பிரபலங்கள் நடித்த ஒரு படத்தை இன்னும் சிறப்பாகக் கொண்டு போய் சேர்த்திருக்கலாம். செலவு செய்த பட்ஜெட்டை விடவும் தியேட்டர் வசூல் கிடைத்திருக்க வேண்டிய ஒரு படம் என குறைபட்டுக் கொள்கிறார்கள்.
ஓடிடி தளத்தில் வெளியாகும் போது இந்தப் படத்திற்கான ரசிகர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று இப்போதே சொல்கிறார்கள்.




