சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் |
வாரந்தோறும் பிரபல ஓடிடி தளங்களான ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம், ஜீ5, ஆஹா, சோனி லைவ், லயன்கேட்ஸ் பிளே உள்ளிட்டவற்றில் பலமொழி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகின்றன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் வெளியாகவுள்ள புதுவரவுகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
மார்கன்
லியோ ஜான் பால் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, பிரிகிடா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மார்கன். கிரைம் த்ரில்லர் கதையில் தனது நடிப்பால் மிரட்டிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் ஓடிடி தளத்திற்கு எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில், நாளை (ஜூலை25) டென்ட்கொட்டா, அமேசான் ப்ரைம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.
சரஜமீன்
பாலிவுட் இயக்குநர் கயோஸ் இரானி இயக்கத்தில் பிருத்விராஜ், கஜோல், இப்ராகிம் அலிகான் ஆகியோர் நடிப்பில் வெளியான சரஜமீன். காஷ்மீர் பின்னணியில் நடக்கும் தியாகம், கடமை பற்றிய கதை அம்சத்தைக் கொண்ட இந்த திரைப்படம் நாளை (ஜூலை25) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கண்ணப்பா
தெலுங்கு இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்து பிரமாண்ட பான் இந்தியா படமாகக் கடந்த மாதம் வெளியான படம் கண்ணப்பா. ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்து ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படம் நாளை (ஜூலை 25) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ரோந்த்
மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ரோந்த். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் இந்த வாரம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மண்டலா மர்டர்ஸ்
நடிகை வாணி கபூர் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ். இந்த வெப்தொடர் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை25) வெளியாகிறது.
ரங்கீன்
மனைவியைப் பழி வாங்குவதற்காகக் கணவன் பாலியல் தொழிலாளியாக மாறுவது போன்று வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இந்தி வெப் தொடர் ரங்கீன். இந்த தொடர் நாளை (ஜூலை25) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.