தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வருடத்தில் இறுதி வாரம் தொடங்கி விட்டது. இந்த வாரமும் கொஞ்சமும் சளைக்காமல் குடும்ப திரைப்படங்கள் முதல் ஆக்ஷன் படங்கள் வரை ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
மிடில் கிளாஸ்
புதுமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், நடிகர் முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் கடந்த நவம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் 'மிடில் கிளாஸ்'. நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னையை தத்ரூபமாக காட்சிப்படுத்தும் விதமாக இந்த திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நேற்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ரிவால்வர் ரீட்டா
ஜே.கே.சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வெளிவந்த திரைப்படம் 'ரிவால்வர் ரீட்டா'. பெண் போலீஸ் அதிகாரியாக இதில் அவர் கதாபாத்திரம் அமையப்பட்டிருக்கும். ஆக்ஷன் சண்டை நிறைந்த இந்த திரைப்படம் நாளை(டிச.26ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
கோபன்ஹேகன் டெஸ்ட்
உளவுத்துறை ஆய்வாளர் அலெக்சாண்டர் ஹேலின் மூளையை யாரோ ஹேக் செய்து அவரது ஒவ்வொரு யோசனையையும் கடத்துவதைக் கண்டுபிடிப்பது போல் கோபன்ஹேகன் டெஸ்ட் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் டிசம்பர் 28ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 வால்யூம்-2
உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 வால்யூம்-2, வெப் தொடர் நாளை(டிச.26ம் தேதி) முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ரஜினி கேங்
இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவான திரைப்படம்' ரஜினி கேங்'. இதில் நடிகர்கள் முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி மற்றும் த்ரில்லர் அடங்கிய கதையுடன் வெளிவந்த இந்த படம் நேற்று முதல் ப்ரைம் வீடியோ மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.