கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' | தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு |
மலையாள திரையுலகில் நடிகர் சங்கம் அம்மா என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மோகன்லால் இருந்தார். கடந்த வருடம் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்க நிர்வாகிகள் பல பேர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சில பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தார்மீக பொறுப்பேற்று நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் மொத்தமாக பதவி விலகினார்கள். தற்போது அரசால் அமைக்கப்பட்ட குழு நடிகர் சங்கத்தை நிர்வகித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சங்க பொதுக்குழு மீண்டும் கூடியது. இதில் மீண்டும் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ஒருமனதாக முடிவு எடுத்து ஏற்கனவே இருந்தது போன்று பொதுக்குழு பொறுப்புகளை எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்வில் பேசிய மோகன்லால், ‛திட்டவட்டமாக தனக்கு தலைவர் பதவியில் இருக்க விருப்பமில்லை என்றும் அடுத்து நடக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பமும் இல்லை' என்று உறுதிப்பட கூறிவிட்டார். இந்த நிலையில் பிரபல மலையாள குணச்சித்திர நடிகரும், மோகன்லாலுடன் லூசிபர் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தவருமான நடிகர் பைஜூ சந்தோஷ் இந்த பொதுக்குழுவில் மோகன்லாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.
பைஜூ சந்தோஷ் இது குறித்து கூறும்போது, “மோகன்லாலுடன் எந்த ஒரு வாக்குவாதத்திலும் நான் ஈடுபடவில்லை. அந்த பொதுக்குழு நிகழ்வுக்கு நான் சில மணி நேரம் தாமதமாக தான் வந்தேன். நான் வந்து சேர்வதற்கும் மோகன்லால் பேசி முடித்திருந்தார். அவர் தலைவராக தொடர தனக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டார் என்கிற தகவல் எனக்கு தெரியாது. அதனால் நான் மேடை ஏறி பேசியபோது அவரை தலைவராக நீங்கள் இருப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் என்பது போன்று கேட்டேன். அதன் பின்னர் தான் அங்கே அவர் முடிவை அறிவித்த பின்பும் ஏன் இப்படி பேசுகிறேன் என்பது போல ஒரு சலசலப்பு எழுந்தது. நானும் இது என்னுடைய விருப்பம் தான் என்று கூறிவிட்டு கீழே இறங்கி விட்டேன். மற்றபடி அவருடன் எந்த ஒரு வாக்குவாதமும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.