சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களாக வெற்றி படங்களை தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்க கார்த்தி கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஏற்கனவே கார்த்தி நடித்துள்ள ‛வா வாத்தியார், சர்தார் 2' ஆகிய படங்கள் இன்னும் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளதால் பிரின்ஸ் பிக்சர்ஸ் கார்த்தி, சுந்தர். சி படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியுள்ளனர் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த படத்தை இருவருமே கைவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களின் பயணத்தை தொடர்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.