‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

நடிகர் அஜித்தை பொறுத்தவரை சண்டைக்காட்சிகள், பைக் மற்றும் கார் சேசிங் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிக்க வேண்டும் என விரும்புபவர். பெரும்பாலும் அவரே தான் நடித்தும் வருகிறார். அதனால் பலமுறை அவர் விபத்தில் சிக்கி காயமடைந்து சில அறுவை சிகிச்சைகள் கூட அவருக்கு செய்யப்பட்டுள்ளன. அதேபோலத்தான் ஏவிஎம் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‛திருப்பதி' படத்தில் ‛திருப்பதி வந்தா திருப்பம்..' என்கிற பாடலில் அஜித் வாயில் இருந்து பெட்ரோலை ஊதி அதை வெளியிலிருந்து தீப்பற்ற செய்யும் காட்சி இடம் பெற்றது.
இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது குறித்து சமீபத்தில் இயக்குனர் பேரரசு ஒரு பேட்டியில் கூறும்போது, “அந்த காட்சியில் நடிப்பதற்காக அஜித்திற்கு டூப் போடுவதற்காக உண்மையிலேயே அது போன்று பெட்ரோலை குடித்து வெளியில் துப்பி தீப்பற்ற வைக்கும் கலைஞர் ஒருவரை நடிக்க அழைத்திருந்தோம். அவர் அதை ரிகர்சல் பார்த்தபோது அருகில் இருந்த அஜித் இதை நானே செய்கிறேன் என்றார். ஆனால் அது மிகவும் ரிஸ்க்.. கொஞ்சம் தவறினாலும் அஜித் தீ விபத்தில் சிக்கும் அபாயம் இருந்ததால் வேண்டாம் என்று நாங்கள் அவரை தடுத்தோம்.
ஆனாலும் அவர் பிடிவாதமாக நின்று அந்த சாகசம் செய்யும் நபரிடம் இருந்து படப்பிடிப்பு தளத்திலேயே கொஞ்ச நேரத்தில் அதை கற்றுக்கொண்டு அந்த காட்சிக்கு தயாரானார். அதற்கு முன்பு இரண்டு படங்கள் பல ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள் இயக்கியிருந்தாலும் இந்த காட்சிக்கு ஆக்சன் சொல்வதற்குள் எனக்கு கால்கள் நடுங்கி விட்டன.
ஆனால் அதே சமயம் ஆக்சன் சொன்னதும் அஜித் பர்பெக்டாக பெட்ரோலை குடித்து வெளியில் அதை துப்பி தீயில் எரிய வைத்தார். அதே சமயம் அவர் பாதுகாப்புக்காக சொன்ன விஷயங்களையும் சரியாக கடைபிடித்தால் அந்த காட்சி எந்தவித அசம்பாவிதமும் இன்றி நன்றாக படமானது. அந்தக் காட்சி முடித்ததும் படக்குழுவினர் அனைவருமே கைதட்டி அஜித்துக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.