‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு நேற்று (நவ.,15) ஹைதராபாத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‛வாரணாசி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மகேஷ்பாபு ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதற்கான அறிமுக போஸ்டர் மற்றும் வீடியோவுடன் அறிவித்துள்ளனர். அதில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கும்பா கதாபாத்திரத்தில் பிரித்விராஜூம், மந்தாகினி கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய மகேஷ்பாபு, ‛‛இது என்னுடைய கனவு திரைப்படம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இப்படியான வாய்ப்பு கிடைக்கும். இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். 'வாரணாசி' படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்'' எனப் பேசினார்.