சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். பாடகி சைந்தவியை காதலித்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் உள்ளார். கடந்தாண்டு இவர்கள் பிரிவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர். மேலும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்., 25ம் தேதி நடந்தது. ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். மனம் ஒத்து பிரிவதில் இருவரும் உறுதியாக உள்ளனர். அதேசமயம் மகளை சைந்தவி பார்த்துக் கொள்வதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஜிவி பிரகாஷ் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று(செப்., 30) வழங்கப்பட்டது. அதில் ஜிவி பிரகாஷ், சைந்தவி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மகள் அன்வியை சைந்தவி பார்த்துக் கொள்ளலாம் என ஏற்கனவே ஜிவி பிரகாஷ் தெரிவித்ததால் அப்படியே செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது.