சினிமாவிலும் கை வைத்த டிரம்ப்: இந்தியப் படங்களுக்குப் பெரும் பின்னடைவு | தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் |
மலையாளத்தில் 2015ல் மம்முட்டி நடித்த உட்டோப்பியாயிலே ராஜாவு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜுவல் மேரி. அதே வருடத்தில் மீண்டும் மம்முட்டியுடன் பத்தே மாதிரி என்கிற படத்தில் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தமிழில் அண்ணாதுரை, மாமனிதன் ஆகிய படங்களில் நடித்த இவர் கடந்த ஏழு வருடங்களில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதேசமயம் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களில் விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் ஜுவல் மேரி.
இது குறித்து அவர் கூறும்போது, “கடந்த 2021 முதல் எனக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறேன். பரஸ்பரம் விவாகரத்து பெற்றுவிடலாம் என நினைத்தால் அது அவ்வளவு எளிதாக எனக்கு கிடைக்கவில்லை. கடும் போராட்டத்திற்கு பிறகு கடந்த வருடம் விவாகரத்து கிடைத்தது. அந்த சந்தோஷத்தில் வெளிநாடுகள் எல்லாம் சென்று அங்கு வசிக்கும் என்னுடைய தோழிகளுடன் சந்தோஷமாக நாட்களை செலவிட்டு திரும்பினேன். திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு உடல் நலப் பரிசோதனைக்கு சென்ற போது தான் கேன்சர் பாதிப்பின் துவக்கத்தில் இருந்தது தெரிய வந்தது. அப்படியே இடிந்து போய் விட்டேன்.
ஆனாலும் எனக்கு சகோதரி போன்று இருந்த டாக்டர் சித்ரா என்பவர் எனக்கு ஆறுதல் கூறி முறையாக பரிசோதனைகளையும் சிகிச்சையும் மேற்கொள்ள செய்தார். ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. அதன் பிறகு எனக்கு கிட்டத்தட்ட ஆறு மாதம் சரியாக வாய் பேசவே வரவில்லை. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்தேன். மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து அந்த ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர் நீங்கள் கேன்சரில் இருந்து விடுதலை பெற்று விட்டீர்கள் என்று கூறிய போது தான் போன உயிர் திரும்பி வந்தது” என்று கூறியுள்ளார்..