பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

ஆண்டு இறுதியின் இரண்டாவது வாரமும் வந்துவிட்டது. அதேபோல் இந்த வாரத்திற்கான புதுப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த வரிசையில், இந்த வாரமும் புதுப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவை என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
உன் பார்வையில்
பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்கத்தில் பார்வதி நாயர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'உன்பார்வையில்'. தனது உடன்பிறப்பைக் கொலை செய்தவர்களைப் பார்வதி நாயர் எவ்வாறு பழிவாங்குகிறார் என்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை(டிச.,19ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Raju Weds Rambai
தெலுங்கு இயக்குநர் சைலு காம்பதி இயக்கத்தில் அகில் ராஜ், தேஜஸ்வி ராவ் நடிப்பில் வெளியான திரைப்படம்'Raju Weds Rambai'. காதல் ரொமான்டிக் திரைப்படமான இந்த படம் இன்று(டிச.18ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஹார்டிலே பேட்டரி
இயக்குநர் சதாசிவம் செந்தில் ராஜன் இயக்கத்தில் பாடினி குமார், குரு லட்சுமணன் நடிப்பில் வெளிவந்துள்ள வெப் தொடர் 'ஹார்டிலே பேட்டரி'. இந்த வெப் தொடர் 16ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Premante
இயக்குநர் நவநீத் ஸ்ரீராம் இயக்கத்தில், பிரியதர்ஷினி புலிகொண்டா, ஆனந்தி, வெண்ணேலா கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம்'Premante'. இந்த திரைப்படம் நாளை(டிச.19ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
நயனம்
தெலுங்கு இயக்குநர் ஸ்வாதி பிரகாஷ் மந்திர்பிரகடா இயக்கத்தில் வெளிவந்துள்ள வெப்தொடர் 'நயனம்'. க்ரைம் த்ரில்லர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில் வருண் சந்தோஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நாளை(டிச.19ம் தேதி) ஜீ5ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
பார்மா(Pharma)
இயக்குநர் பி.ஆர் அருண் இயக்கத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் ரஜித் கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள வெப்தொடர்'பார்மா(Pharma)'. மருத்து விற்பனையில் நடக்கும் மோசடிகளை எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வெப்தொடரில், மருத்து விற்பனை செய்யும் பிரதிநிதியாக நிவின் பாலி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாளை(டிச.19ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் (Dominic and Ladies Purse)
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்(Dominic and Ladies Purse)'. இந்த திரைப்படம் நாளை(டிச.19ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.