டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் வந்த போது தியேட்டர்கள் மூடப்பட்டன. அதனால், புதிய படங்கள் தேங்கி நின்ற நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்களை வெளியிடுவது பரபரப்பாக ஆரம்பமானது. ஒரு சில படங்களை டிவி, யு டியூப் தளங்கள், இணையதளங்கள் ஆகியவற்றிலும் வெளியிட்டார்கள். 2020ம் ஆண்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்கள், 2021ல் 40 படங்கள், 2022ல் 20 படங்கள் வரை வெளிவந்தன.
2023 மற்றும் 2024ம் வருடங்களில் அது 10க்கும் கீழே குறைந்து போனது. இந்த 2025ம் வருடத்திலும் அதே நிலைதான் நீடிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரையில், ஓடிடி தளங்களில், 'டெஸ்ட், ராம்போ, டியர் ஜீவா, ஸ்டீபன், உன் பார்வையில்' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களிலும் 'கந்தன் மலை' படம் யு டியூப் தளத்திலும் நேரடியாக வெளியானது.
தியேட்டர்களில் மட்டும் வெளியான படங்களை ரசித்த மக்கள் 2020ல் ஆரம்பித்து ஒன்றிரண்டு வருடங்களில் ஓடிடியில் நேரடியாக வெளியான சில படங்களுக்கும் பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். ஆனால், தற்போது ஓடிடியில் நேரடி வெளியீடு என்றால் அதை யாரும் கவனிப்பதுமில்லை. திரையுலகினரும் தியேட்டர் வெளியீடுகளைத் தவிர்த்து விட்டு ஓடிடி பக்கம் நேரடியாக வெளியிடப் போவதற்குத் தயங்குகிறார்கள். அதனால், இந்த வருடமும் மிகக் குறைவான படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகி உள்ளன.