சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' |

நகைச்சுவை நடிகர் சதீஷ் கடந்த சில வருடங்களாக மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கூகுள் குட்டப்பா, கார்டியன் ஆகிய படங்களை இயக்கிய குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
புதிய வருடப்பிறப்பில் இந்த படத்திற்கு 'பத்து நாள் ராஜா' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். சதீஷ் சட்டையில் ஆங்காங்கே ரத்த கரைகள் படிந்திருக்க ஒரு கையில் காய்கறி பை மற்றொரு கையில் சாப்பாடு பை என கண்ணாடி போட்டுக் கொண்டு புதிய தோற்றத்தில் உள்ளார்.
இதில் கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கிறார். சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.