குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் | முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! |
கன்னடத்தில் வெளியான தியா படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை குஷி ரவி. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புக்காக காத்திருந்த சமயத்தில் தான் அடிபொலி என்கிற வீடியோ ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. மானே ஒமானே என்கிற அந்த பாடலில் அஸ்வினுடன் சேர்ந்து கலக்கலாக பெர்மான்ஸ் செய்த குஷி ரவி இங்கே தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்து விட்டார்.
இந்தநிலையில் தெலுங்கில் இருந்து நடிகர் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு குஷி ரவியை தேடி வந்துள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் குஷி ரவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, “புதிய ஊர், புதிய மொழி மற்றும் புதிய ஆரம்பம்.. ஆனால் அதே அன்பை உங்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார் குஷி ரவி.