வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக தமன்னா நடித்துள்ள சீட்டிமார் படம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தமன்னா நடித்துள்ள மேஸ்ட்ரோ என்கிற படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனால் மேஸ்ட்ரோ படக்குழுவினர் தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தமன்னாவிற்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஒருபக்கம் மேஸ்ட்ரோ படத்தின் பிரஸ்மீட்டும், இன்னொரு பக்கம் சீட்டிமார் படத்தின் சக்சஸ் மீட்டும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடைபெற்றன. இரண்டிலுமே தமன்னா கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மேஸ்ட்ரோ படம் இன்னும் ரிலீஸ் ஆகாததால் அந்த படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து தமன்னா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமன்னாவோ மேஸ்ட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் முதலில் கலந்து கொண்டு, அதன்பிறகு உடனடியாக சீட்டிமார் படத்தின் சக்சஸ் மீட்டிலும் தனது வருகையை பதிவு செய்து தனது தொழில் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். தாங்கள் நடித்த படத்திற்கு புரமோஷனுக்கு வராத நடிகைகள் மத்தியில் தமன்னாவின் இந்த செயல் தெலுங்கு திரையுலகில் பாராட்டை பெற்று வருகிறது.




