விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

என்னுடைய 30வது வயதில் திருமணம் செய்து கொண்டு, குடும்பம், குழந்தை என செட்டில் ஆக நினைத்தேன். அது நடக்கவில்லை என மனம் திறந்து இருக்கிறார் தமன்னா. சரி, இப்ப, அவர் வயது என்ன? ஏன் இப்படி சொல்கிறார் என கேட்டால், இப்போது தமன்னாவின் வயது 35. கடந்த 20 ஆண்டுகளாக ஹிந்தி மொழிகளில் பலவற்றில் நடித்து விட்டார். சினிமா, வெப்சீரியல் என 90 எண்ணிக்கை தாண்டிவிட்டார். ஆனாலும், அவர் மனதில் திருமணம் குறித்த ஆசை இருக்கிறது. அவரின் சில காதல்கள் தோற்று இருக்கின்றன.
சமீபத்தில் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணத்தில் முடியும் என நினைத்த அந்த காதல் உடைந்துவிட்டது. ஏனோ காதலனை பிரிந்துவிட்டார் தமன்னா. இந்த நிலையில்தான், 35 வயதிலும் திருமணம் ஆகவில்லையே என்று பேசி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தமன்னாவுக்கு கவர்ச்சி ரோல், ஹிந்தியில் அழுத்தமான கேரக்டர் நிறைய வருகின்றன. தென்னிந்தியாவில் அவர் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும், ஹிந்தியில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். ஆனாலும், காதல், கல்யாணம் குறித்த கவலை அவர் மனதில் இருக்கிறது. அதனால்தான் இப்படி பேசியிருக்கிறார். எல்லா பெண்களுக்கும் உரிய கவலைதானே என்கிறார்கள்.