மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் தான் சம்பந்தப்பட்ட பணிகளை ரஜினி முடித்துக் கொடுத்து விட்டார்.
அறுவை சிகிச்சை
ரஜினிகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டார். அப்போது ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அமெரிக்காவில் இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார். அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு அவர் அமெரிக்கா செல்வதாக இருந்தது. கொரோனா தொற்றால் படப்படிப்பு பாதிக்கப்பட்டது, இந்தியர்கள் அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு தடை விதித்தது என பல காரணங்களால் ரஜினியின் அமெரிக்கப் பயணம் தள்ளிப் போனது.
கத்தார்
வெளிநாட்டிற்கு தனி விமானத்தில் செல்ல, மத்திய அரசின் அனுமதி தேவை. ரஜினி நேரடியாக மத்திய அமைச்சர்களுடன் பேசியதையடுத்து அந்த அனுமதி கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினியுடன் அமெரிக்கா புறப்பட்டார். அதிகாலை 3.40 மணிக்கு கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டார். சென்னையில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும் ரஜினி அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்கிறார்.
3 வாரங்கள்
இதற்காக ரஜினி இன்று அதிகாலை 1.15 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதிக்கு வந்தார். அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். ஆனால் ரஜினி யாருக்கும் பேட்டி அளிக்காமல் வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றார்.
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சுமார் 3 வாரங்கள் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். நடிகர் தனுஷ் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார். அவருடன் ஐஸ்வர்யாவும் சென்றார். தனுஷ் நாடு திரும்பும் நிலையில் ஐஸ்வர்யா சில நாட்கள் பெற்றோருடன் தங்க திட்டமிட்டுள்ளார்.