ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகம் வசூலித்த படம் 'கல்கி 2898 எடி'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆரம்பமாகும் என்றார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்திலிருந்து நாயகி தீபிகா படுகோனே விலக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என தீபிகா 'கண்டிஷன்' போட்டுள்ளாராம். அதன் காரணமாகவும் அவர் நடிக்கவிருந்த 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து பேச்சுவார்த்தையுடன் விலகினார். அவருக்கும் அப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் அது தொடர்பாக சண்டை நடந்து அவர் மறைமுகமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வரை நடந்தது.
தற்போது 'கல்கி 2' குழுவினரும் தீபிகாவின் ஆறு முதல் எட்டு மணி நேர வேலையை ஏற்க மறுப்பதாகவும், அவருடைய காட்சிகளைக் குறைக்கலாமா அல்லது முழுவதுவமாக நீக்கிவிடலாமா என யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தீபிகாவின் இந்த குறிப்பிட்ட சில மணி நேர வேலைக்கு பாலிவுட் பிரபலங்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.